இந்தியாவின் டார்க்நெட் மூலமான போதைப்பொருள் நடவடிக்கை ஒழிப்பு
July 7 , 2025 2 days 33 0
கேட்டமெலான் என்ற மிகப் பெரிய டார்க்நெட் மூலமான போதைப்பொருள் கடத்தல் குழுவைத் தடுப்பதற்காக போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (NCB) மெலன் நடவடிக்கையினை நடத்தியது.
ஐக்கியப் பேரரசிலிருந்து லைசெர்ஜிக் ஆசிட் டைஎத்திலமைடு (LSD) மற்றும் கேட்டமைன் ஆகியவற்றை வாங்கி இணைய சங்கேதப் பணங்களைப் பயன்படுத்தி இயங்கலையில் விற்கும் ஒருவரால் இந்தக் குழு வழி நடத்தப்பட்டது.
LSD என்பது பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மன மருட்சியினை உருவாக்கும் மருந்து ஆகும்.
இது காட்சி சார்ந்த அனுபவங்கள், மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தி, மூளையின் செரோடோனின் அமைப்பை பாதிக்கிறது.
கேட்டமைன் என்பது கனவு போன்ற மற்றும் உடலுக்கு வெளியேயான உணர்வுகளை ஏற்படுத்தும் ஒரு மயக்க மருந்தாகும்.