TNPSC Thervupettagam

இந்தியாவின் திறந்தவெளி இயற்கை சூழலியல் அமைப்புகள்

September 3 , 2026 10 days 88 0
  • மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெற்ற பாலைவனமயமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் 17 ஆவது மாநாட்டில் (UNCCD COP17), இந்தியா தனது புல்வெளிகள் மற்றும் பிற திறந்தவெளி இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கான முதல் வழிகாட்டியை வெளியிட்டது.
  • இந்த வழிகாட்டியானது புல்வெளிகள், சவானாக்கள், பாலைவனங்கள், புதர்நிலங்கள், பள்ளத்தாக்குகள் மற்றும் பாறை பீடபூமிகளை "தரிசு நிலங்கள்" என அழைக்காமல் முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளாக அங்கீகரிக்கிறது.
  • இது தார் பாலைவனம், பன்னி புல்வெளிகள், தக்காண சவானாக்கள், ஆரவல்லி புதர்நிலங்கள், யமுனை-சம்பல் பள்ளத்தாக்குகள் மற்றும் தமிழ்நாட்டின் தேரி காடு போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது.
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் (MoEFCC), அசோகா சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அறக்கட்டளை (ATREE), இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இது உருவாக்கப்பட்டது.
  • ரைகாக்கள், தங்கர்கள், குஜ்ஜர்கள் மற்றும் பக்கர்வால் போன்ற சமூகங்கள் உள்ளிட்ட மேய்ச்சல் வாழ்வாதாரங்கள், பல்லுயிர் பெருக்கம், மண் கார்பன் மற்றும் நீரியல் ஆகியவற்றை இந்த வழிகாட்டி எடுத்துக்காட்டுகிறது.
  • கானமயில் மற்றும் வெளிமான் போன்ற உயிரினங்கள் திறந்தவெளி வாழிடங்களையே சார்ந்துள்ளதாலும், இந்த இடங்கள் நிலத்தடியில் கணிசமான கார்பனை சேமித்து வைப்பதாலும், மரம் நடுதல் என்பது எல்லா நேரங்களிலும் பொருத்தமானது அல்ல என்பதை இது வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்