TNPSC Thervupettagam

இந்தியாவின் தூய்மையான எரிசக்தியின் வளர்ச்சி 2025

October 11 , 2025 13 hrs 0 min 14 0
  • 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்தது.
  • இது 17 டெராவாட்-மணிநேரம் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதுடன், மொத்த மின்சார உற்பத்தியில் சூரிய மின் உற்பத்தியின் பங்கானது 9.2% ஆக அதிகரித்தது.
  • காற்றாலை மின்சார உற்பத்தி 11 டெராவாட்-மணிநேரம் என்ற அளவில் அதிகரித்ததுடன், அதன் பங்கு 5.1% ஆக உயர்ந்தது.
  • தூய்மையான எரிசக்தி விரிவாக்கம் ஆனது, மின்சாரத் துறை உமிழ்வை 24 மில்லியன் டன்கள் குறைத்தது.
  • நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தியானது 22 டெராவாட்-மணிநேரம் ஆக குறைந்தது; எரிவாயு அடிப்படையிலான மின்சார உற்பத்தியானது 34% குறைந்தது.
  • அணுசக்தி சார் மின்சார உற்பத்தியானது 14% அதிகரித்துள்ளது; நீர் மின்னாற்றல் உற்பத்தியானது 17% அதிகரித்துள்ளது.
  • தூய்மையான எரிசக்தி வளர்ச்சியானது அதன் தேவையின் அதிகரிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.
  • இந்த அறிக்கையை உலகளாவிய எரிசக்தி சிந்தனைக் குழுவான எம்பர் வெளியிட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்