December 2 , 2025
3 days
58
- சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய தூய்மையான தொழில் துறை திட்டங்களை இந்தியா கொண்டுள்ளது.
- நாட்டில் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள 65 வணிக அளவிலான தூய்மையான தொழில்துறை திட்டங்கள் உள்ளன.
- ஆறு தொழிற்சாலைகள் மட்டுமே இறுதி முதலீட்டு முடிவு (FID) கட்டத்தை எட்டி உள்ளன.
- இந்தத் தொழிற்சாலைகள் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளன.
- மொத்தத் திட்டத்தின் சுமார் 80% ஆனது 50 அம்மோனியா மற்றும் மெத்தனால் ஆலைகள் உட்பட, இரசாயனத் துறையால் பயன்படுத்தப்படுகிறது.
- குறைந்த உமிழ்வுத் தொழில்நுட்பங்களை இயக்கும் எஃகு, சிமெண்ட், விமானப் போக்குவரத்து மற்றும் அலுமினியம் ஆகியவை பிற துறைகளில் அடங்கும்.

Post Views:
58