TNPSC Thervupettagam

இந்தியாவின் தென்கோடி விமான தளம் – I.N.S பாஸ்

October 28 , 2019 2079 days 734 0
  • கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், இந்திய ஆயுதப் படைகளின் தென்கோடியில் உள்ள விமான தளமான  I.N.S பாஸ் என்ற தளத்தைப் பார்வையிட்டார்.
  • இந்தியக் கடற்படைக் கப்பல் (Indian Naval Ship - INS) ‘பாஸ்’ ஆனது 2012 ஆம் ஆண்டு ஜூலை  மாதத்தில் இயக்கப்பட ஆரம்பிக்கப் பட்டது.
  • இது அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியாகும். அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டுப்பாட்டு அமைப்பானது 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய ஆயுதப் படைகளின் ஒரே முத்தரப்புச்  சேவையாகும்.

முக்கியத்துவம் வாய்ந்த இருப்பிடம்
  • இது இந்திய ஒன்றியப் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள நிக்கோபார் தீவுகளின் (தென்கோடியில் அமைந்துள்ள மற்றும் மிகப்பெரிய தீவான கிரேட் நிக்கோபார் தீவு) காம்பெல் விரிகுடாவில் அமைந்துள்ளது.
  • இந்த இடம் இந்தியாவின் “கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான சாளரம்” என்று வர்ணிக்கப் பட்டுள்ளது.
  • இது கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மூலோபாயச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் இந்தியப் பெருங்கடலின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றான சிக்ஸ் டிகிரி சேனலுக்கு அருகில் உள்ளது.
  • மேலும் இது மலாக்கா ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்