இந்தியாவின் தேசியக் கணக்கு புள்ளி விவரங்களுக்கான ‘C’ தரம்
December 1 , 2025 11 days 84 0
சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆனது, முறைசார் பலவீனங்களைக் காரணம் காட்டி, இந்தியாவின் தேசிய கணக்குப் புள்ளி விவரங்களுக்கு (NAS) ‘C’ தரத்தினை வழங்கியது.
இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ‘B’ தரத்தினைப் பெற்றது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு ஆகியவை தற்போதைய பொருளாதாரத்தைப் பிரதிபலிக்காத 2011–12 என்ற அடிப்படை ஆண்டையே இன்னும் பயன்படுத்துகின்றன.
முழு உற்பத்தியாளர் விலைக் குறியீடு (PPI) இல்லாததால் மொத்த விலைக் குறியீடு (WPI) ஒரு பணவீக்கக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.
முறைசாரா துறை சரியாக உட்சேர்க்கப் படாததால், உற்பத்தி மற்றும் செலவினத் தரவுகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன.
காலாண்டு அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவு ஆனது போதுமான பருவகால ஈடு செய்தல் இல்லாததால், வளர்ச்சிப் போக்குகள் குறித்த மதிப்பீட்டினை இது பாதிக்கிறது.
இந்தியாவின் NAS, 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் தேசிய கணக்குகள் அமைப்பை (UN-SNA 2008) பயன்படுத்திப் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தினால் (MoSPI) தொகுக்கப்படுகிறது.