TNPSC Thervupettagam

இந்தியாவின் தேசியக் கணக்கு புள்ளி விவரங்களுக்கான ‘C’ தரம்

December 1 , 2025 11 days 83 0
  • சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆனது, முறைசார் பலவீனங்களைக் காரணம் காட்டி, இந்தியாவின் தேசிய கணக்குப் புள்ளி விவரங்களுக்கு (NAS) ‘C’ தரத்தினை வழங்கியது.
  • இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ‘B’ தரத்தினைப் பெற்றது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு ஆகியவை தற்போதைய பொருளாதாரத்தைப் பிரதிபலிக்காத 2011–12 என்ற அடிப்படை ஆண்டையே இன்னும் பயன்படுத்துகின்றன.
  • முழு உற்பத்தியாளர் விலைக் குறியீடு (PPI) இல்லாததால் மொத்த விலைக் குறியீடு (WPI) ஒரு பணவீக்கக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • முறைசாரா துறை சரியாக உட்சேர்க்கப் படாததால், உற்பத்தி மற்றும் செலவினத் தரவுகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன.
  • காலாண்டு அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவு ஆனது போதுமான பருவகால ஈடு செய்தல் இல்லாததால், வளர்ச்சிப் போக்குகள் குறித்த மதிப்பீட்டினை இது பாதிக்கிறது.
  • இந்தியாவின் NAS, 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் தேசிய கணக்குகள் அமைப்பை (UN-SNA 2008) பயன்படுத்திப் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தினால் (MoSPI) தொகுக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்