TNPSC Thervupettagam

இந்தியாவின் தேசிய செந்நிறப் பட்டியல் மதிப்பீட்டு முன்னெடுப்பு

October 13 , 2025 14 hrs 0 min 52 0
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் நடைபெற்ற IUCN உலகப் பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்றது.
  • உயிரியல் பன்முகத் தன்மை உடன்படிக்கை (CBD) மற்றும் குன்மிங்-மாண்ட்ரியல் உலகளாவியப் பல்லுயிர் கட்டமைப்பு (KMGBF) ஆகியவற்றின் கீழான கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு தேசிய செந்நிறப் பட்டியல் மதிப்பீட்டு முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.
  • தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட, அறிவியல் அடிப்படையிலான அமைப்பு மூலம் உயிரினங்களின் பாதுகாப்பு நிலையை மதிப்பிடுவதற்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
  • IUCN உலகளாவியத் தரநிலைகளைப் பின்பற்றி, 2030 ஆம் ஆண்டிற்குள் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கான தேசிய செந்நிற தரவுப் புத்தகங்களை வெளியிடுவதே இதன் குறிக்கோள் ஆகும்.
  • இந்த முன்னெடுப்பானது துல்லியமான இனங்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் வளங் காப்புத் திட்டமிடல், அச்சுறுத்தல் குறைப்பு மற்றும் தகவலறிந்த கொள்கை மேம்பாட்டை ஆதரிக்கிறது.
  • நான்கு உலகளாவியப் பல்லுயிர்ப் பெருக்க இடங்களைக் கொண்டுள்ள இந்தியா உலகளாவிய தாவரங்களில் 8% மற்றும் 7.5% விலங்கினங்களைக் கொண்டுள்ளது என்ற நிலையில் இதில் உள்ளூர் இனங்கள் அதிக சதவீதத்தில் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்