இந்தியாவின் நிலக்கரிப் பற்றாக்குறையைத் தீர்க்க ரஷ்யா உதவி
October 22 , 2021 1399 days 566 0
சுரங்கம் மற்றும் எஃகு தொழில்துறையில் ஒன்றிணைந்துச் செயல்படுவதற்காக இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது குறிப்பாக கற்கரியாக்க நடவடிக்கைகள் (coking coal) மீது ஈடுபாடு செலுத்துகிறது.
இந்த ஒப்பந்தமானது இந்தியாவினுடைய 2017 ஆம் ஆண்டு தேசிய எஃகுக் கொள்கையின் கீழ் 2030 ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தியை எட்டுவதற்கு இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் இதற்காக முன்னோக்கிய மற்றும் பின்னோக்கிய ஒருங்கிணைப்பிலும் (forward and backward integration) ஈடுபட்டு வருகிறது.