இந்தியாவின் நிலத்தடி நீர் மட்டம் 22 சதவிகிதம் குறைவு
November 25 , 2019 2080 days 628 0
நாட்டில் கிட்டத்தட்ட 22% நிலத்தடி நீர் வறண்டுவிட்டதாக அல்லது ‘மோசமான’ & ‘அதிக அளவில் சுரண்டப்பட்ட’ வகைகளில் இருப்பதாக மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் (Central Ground Water Board - CGWB) ஆனது ‘இந்தியாவின் மாறுபட்ட நிலத்தடி நீர் வளங்கள்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 6,881 பகுதிகளில் 1,499 (தொகுதிகள் / மண்டலங்கள் / தாலுகாக்கள்) ‘அதிக சுரண்டல்’ (1,186 பகுதிகள்) மற்றும் ‘மிக மோசமானது’ (313 பகுதிகள்) என்ற பிரிவுகளின் கீழ் வந்தன என்பதை இது காட்டுகிறது.
அதிக எண்ணிக்கையிலான நீர் பற்றாக்குறைத் தொகுதிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.