இந்தியாவின் நீரிழிவு நோய் பெருந்தொற்று செறிந்த பகுதி
January 29 , 2026 2 days 52 0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் – இந்தியா நீரிழிவு நோய் (ICMR–INDIAB) எனும் ஆய்வு, தமிழ்நாட்டில் நீரிழிவு மற்றும் நீரிழிவுக்கு முந்தைய நிலை நோய்களில் ஒரு பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் சுமார் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடனும், 136 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையுடனும் வாழ்கின்றனர்.
தமிழ்நாட்டில், 20 வயதுக்கு மேற்பட்ட மக்களிடையே 2008-2010 காலகட்டத்தில் 11.1 சதவீதமாக இருந்த நீரிழிவு நோயின் பாதிப்பு, 2022-2023 காலகட்டத்தில் 22.7 சதவீதமாக உயர்ந்து, 104 சதவீத அதிகரிப்பைக் காட்டியுள்ளது.
அதே காலகட்டத்தில், மாநிலத்தில் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையின் பாதிப்பு 12.2% இலிருந்து 24.8% ஆக உயர்ந்துள்ளது, இது 103% அதிகரிப்பாகும்.
தற்போது தமிழ்நாட்டில் சுமார் 12 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதோடு மேலும் வரும் ஆண்டுகளில் மேலும் சுமார் 10 மில்லியன் பேருக்கு இந்த நோய் ஏற்படக் கூடும்.