TNPSC Thervupettagam

இந்தியாவின் பருவநிலை இலக்குகள் 2031–2035

March 29 , 2026 2 days 64 0
  • உலகளாவியப் பருவநிலை ஒப்பந்தங்களின் கீழ் 2031–2035 ஆண்டுகளுக்கான புதிய பருவநிலை இலக்குகளுக்கு (NDC) இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2005 ஆம் ஆண்டு அளவோடு ஒப்பிடுகையில், 2035 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) உமிழ்வு தீவிரத்தை இந்தியா 47% குறைக்கும்.
  • 2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மொத்த மின்சாரத் திறனில் 60% புதைபடிவம் அல்லாத (சூரிய ஒளி, காற்று போன்றவை) எரிசக்தி ஆதாரங்களில் இருந்து பெறப் படும்.
  • காடுகள் மற்றும் மரங்கள் மூலம் 3.5-4.0 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் கார்பன் தேக்கம் உருவாக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இந்த இலக்குகள் ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டின் (UNFCCC) கீழ் சமர்ப்பிக்கப்பட்டு, பாரிஸ் ஒப்பந்த இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன.
  • இந்த இலக்குகள் 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை எட்டும் இந்தியாவின் நீண்ட கால இலக்கிற்கு துணை புரிகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்