இந்தியா பல்லுயிர்ப் பெருக்க ஒப்பந்தத்தின் கீழான தனது 7வது தேசிய அறிக்கையைசமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கை 23 தேசியப் பல்லுயிர் இலக்குகள் (NBTs) மற்றும் 142 குறிகாட்டிகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை மதிப்பிடுகிறது.
இந்த இலக்குகள் 2022 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டகுன்மிங்-மாண்ட்ரியல் உலகளாவியப் பல்லுயிர்க் கட்டமைப்புடன் (KMGBF) ஒத்துப்போகின்றன.
இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் (MoEFCC) தயாரிக்கப்பட்டது.
தற்போது NBT1 – பல்லுயிர்த் திட்டமிடல் மற்றும் NBT2 – சூழலியல் மறுசீரமைப்பு ஆகிய இரண்டு இலக்குகள் மட்டுமே சரியான பாதையில் உள்ளன.
பல்லுயிர்ப் பெருக்க ஒப்பந்தம் (CBD) என்பது பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் நீடித்த பயன்பாட்டிற்காக 1992 ஆம் ஆண்டு ரியோ புவி உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உலகளாவிய ஒப்பந்தமாகும்.