TNPSC Thervupettagam

இந்தியாவின் பால்வளத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல்

January 15 , 2026 7 days 67 0
  • தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தின் (NDLM) கீழ் சுமார் 35.68 கோடிக்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு பசு ஆதார் வழங்கப்பட்டுள்ளது.
  • பசு ஆதார் என்பது கால்நடைகளின் தடுப்பூசி, இனப்பெருக்கம் மற்றும் சிகிச்சை விவரங்களை பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் 12 இலக்க தனித்துவமான காதணி குறியீட்டு எண்ணாகும்.
  • 54 பால் தொழிற்சங்கங்களில் 17.3 லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் டிஜிட்டல் பால் கட்டணம் மற்றும் தரப் பதிவுக்காக தானியங்கி பால் சேகரிப்பு முறையை (AMCS) பயன்படுத்துகின்றனர்.
  • தரவு அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் திட்டமிடலுக்காக சுமார் 198 பால் தொழிற்சங்கங்களும் 15 கூட்டமைப்புகளும் இணைய அடிப்படையிலான பால் தகவல் அமைப்பை (i-DIS) பயன்படுத்துகின்றன.
  • போக்குவரத்து செலவு மற்றும் நேரத்தைக் குறைக்க தேசிய பால் மேம்பாட்டு வாரியம் (NDDB) புவியிடங்காட்டி (GIS) அடிப்படையிலான பால் வழித்தட செயலாக்கத்தினையும்  அறிமுகப்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்