இந்தியாவின் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை (ATGM)
July 3 , 2022 1105 days 513 0
பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையானது இலக்கைத் துல்லியமாக தாக்குகிறது என்றும் குறைந்தபட்ச வரம்புகளில் அது இலக்கைச் சரியாகத் தாக்குகிறதா என்றும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது எனவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையை மகாராஷ்டிராவின் அஹமத் நகரில் உள்ள கேகே என்ற தளத்தில் வெற்றிகரமாகப் பரிசோதித்தன.
இது அர்ஜுன் போர் பீரங்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இது வெடிப்பு நிகழ்வுகளுக்கான எதிர்வினைக் கவசத்தைக் கொண்டுப் பாதுகாக்கப் பட்ட கவச வாகனங்களை வீழ்த்துவதற்காக அதிகளவில் வெடிக்கும் திறன் கொண்ட பீரங்கி எதிர்ப்பு (HEAT) போர்க் கப்பலைப் பயன்படுத்துகிறது.