இந்தியாவின் புதிய யுனெஸ்கோ தற்காலிகத் தளங்கள் 2026
September 12 , 2026 7 hrs 0 min 89 0
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தற்காலிகப் பட்டியலில் இந்தியாவின் நான்கு கலாச்சாரப் பாரம்பரியத் தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இதன் மூலம் இந்தியாவின் மொத்த தளங்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
ரங்க்பூர்-சிவசாகர் வரலாற்றுத் தொகுப்பு (அசாம்), காலனித்துவ தண்டனைக் குடியிருப்பு (அந்தமான் தீவுகள்), நிக்கோபார் கலாச்சாரத் தொடர்ச்சி (நிக்கோபார் தீவுகள்) மற்றும் ஷெகாவதியின் வர்ணம் பூசப்பட்ட ஹவேலி நகரங்கள் (ராஜஸ்தான்) ஆகியவையே அந்த நான்கு தளங்களாகும்.
சிவசாகர் அகோம் பேரரசின் தலைநகரமாக விளங்கியது, அதே சமயம் ஷெகாவதியானது ஹவேலிகளில் வர்ணம் பூசப்பட்ட சுவரோவியங்களுக்குப் பெயர் பெற்றதாகும்.
உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பு ஒரு தளமானது குறைந்தது ஒரு வருடமாவது தற்காலிகப் பட்டியலில் இருக்க வேண்டும்.