இந்தியாவில் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக என 2025 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுக் கொள்கைக்கு (NSP) அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் புதியக் கொள்கையானது, வளர்ச்சிக்கான ஒரு நவீன திட்டத்தினைக் கொண்டு, 2001 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பழைய கொள்கையை மாற்றுகிறது.
NSP 2025 ஆனது, 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளைப் போல உலக விளையாட்டுகளில் இந்தியாவின் நிலையை வலிமையாக்க முனைகிறது.
இந்த முக்கியக் கொள்கையானது உலகளாவிய விளையாட்டுத் துறையில் வெற்றி, பொருளாதாரத்திற்கான விளையாட்டு, சமூக வளர்ச்சி, மக்களின் இயக்கம் மற்றும் கல்வியில் விளையாட்டு போன்ற ஐந்து முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
இது மிகவும் சிறந்தப் பயிற்சி, புதியதொரு தொழில்நுட்பம், தனியார் உதவி மற்றும் முன்னேற்றத்திற்கான தெளிவான இலக்குகளையும் ஆதரிக்கிறது.