இந்தியா தனது நிறுவப்பட்ட மின்சார உற்பத்தி அமைப்பில் 50 சதவீதத்தை புதை படிவமல்லாத எரிபொருள் மூலங்களிலிருந்து பெறுவதில், 2030 இலக்குக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அந்த இலக்கை எட்டி வருகிறது.
ஜூன் 30, 2025 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் 484.82 ஜிகாவாட் (GW) ஆகும்.
இதில், 242.8 ஜிகாவாட் மின்சாரம் புதைபடிவமல்லாத எரிபொருள் மூலங்களிலிருந்து வருகிறது என்பதுடன் 8.78 ஜிகாவாட் அணுசக்தி, 49.38 ஜிகாவாட் நீர்மின்சக்தி மற்றும் 184.62 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அடங்கும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில், சுமார் 5.10 ஜிகாவாட் சிறிய அளவிலான நீர் மின்னாற்றால் உற்பத்தி அமைப்பு, 51.67 ஜிகாவாட் காற்றாலை மின்சக்தி, 11.59 ஜிகா வாட் உயிரி ஆற்றல் மற்றும் 116.25 ஜிகாவாட் சூரிய மின்சக்தி ஆகியவை அடங்கும்.
இந்தச் சாதனையானது, பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் தேசிய அளவில் நிர்ணயிக்கப் பட்ட பங்களிப்புகளின் (NDCs) ஒரு பகுதியாகும்.