2025-ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் இந்தியா உலகளவில் 3-வது இடத்தில் உள்ளதாக சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை (IRENA) தெரிவித்து உள்ளது.
ஓராண்டில் சுமார் 45 GW கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் திறன் சுமார் 250.5 GW-ஐ எட்டியுள்ளது.
இதில் சூரிய ஆற்றல் சுமார் 37 GW பங்களிப்புடன் மிகப்பெரியப் பங்களிப்பாளராக உள்ளது, அதைத் தொடர்ந்து காற்றாலை எரிசக்தி வளர்ச்சி பெற்றுள்ளது.
காற்றாலை மின்சாரம் சுமார் 6.3 GW சேர்க்கப்பட்டுள்ள அதே நேரத்தில் நீர்மின் உற்பத்தித் திறனும் அதிகரித்துள்ளது.
2030-ஆம் ஆண்டிற்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை எட்டுவதற்கான இந்தியாவின் இலக்கிற்கு இது வலு சேர்க்கிறது.