நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் இந்தியா உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் புதைபடிவமற்ற எரிசக்தித் திறன் 262.7 ஜிகாவாட்டை (GW) கடந்து உள்ளதுடன் இது நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் 50%-க்கும் அதிகமாகும்.
உள்நாட்டு சூரிய மின் தகடு உற்பத்தித் திறன் 2024 ஆம் ஆண்டில் 38 ஜிகாவாட்டில் இருந்து, 2025 ஆம் ஆண்டில் 74 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது.
இதே காலத்தில் சூரிய மின்கல உற்பத்தித் திறன் 9 ஜிகாவாட்டிலிருந்து 25 ஜிகா வாட்டாக அதிகரித்துள்ளது.
இவ்வளவு வளர்ச்சி இருந்த போதிலும், நுண்தகு மென்தகடு / வேஃபர்ஸ் மற்றும் பாலி சிலிகான் போன்ற சூரிய சக்தி கூறுகளில் 60-80% இன்னும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத்தில் சூரிய மற்றும் காற்று ஆற்றல் முக்கியப் பங்கு வகிப்பதுடன் 2025-ஆம் ஆண்டில் மட்டும் சூரிய சக்தித் திறன் 44 ஜிகாவாட் கூடுதலாகச் சேர்க்கப் பட்டுள்ளது.