இந்தியாவின் ப்ளாக்கிங்கிற்கான (நடையோட்டத்தின் போது குப்பைகளை அள்ளுபவர்) தூதர்
December 8 , 2019 2069 days 642 0
மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான கிரண் ரிஜ்ஜு இந்தியாவின் ப்ளாக்மேன் என்று சிறப்பாக அறியப்படும் ரிப்பு தமன் பெவ்லி என்பவரை வாழ்த்தி, அவரை இந்தியாவின் ப்ளாக்கிங்கிற்கான தூதராக நியமித்து உள்ளார்.
மேலும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் நாடு தழுவிய ப்ளாக்கிங் தூதர் என்ற ஒரு திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், தங்களது சிறுநகரங்கள்/பெருநகரங்கள்/மாவட்டங்களில் தமது நடையோட்டத்தின் போது குப்பைகளை அள்ளி சுத்தம் செய்து வரும் இந்தியர்களை, அவர்களது பகுதியின் ப்ளாக்கிங் தூதர்களாக நியமிக்கப்பட இருக்கின்றனர்.
ரிபு தமன் பெவ்லி 2017 ஆம் ஆண்டில் ப்ளாக்கிங் (நடையோட்டத்தின் போது குப்பைகளை அள்ளுபவர்) செய்யத் தொடங்கினார்.