TNPSC Thervupettagam

இந்தியாவின் மக்கள் தொகை

April 22 , 2023 834 days 721 0
  • இந்த ஆண்டின் மத்தியில், இந்தியாவின் மக்கள்தொகையானது சீனாவை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) வருடாந்திர உலக மக்கள் தொகை அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகை 1,428 மில்லியனாக இருக்கும் என கூறப்படுகிறது.
  • இது சீனாவின் 1,425 மில்லியன் என்ற அளவு மக்கள் தொகையை விட சற்று அதிகமாக இருக்கும்.
  • 34 கோடி மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • மக்கள் தொகையில் 25 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கையானது, கிட்டத்தட்ட 50% சதவீதத்திற்கு அருகில் இருப்பதால், மக்கள்தொகை ஈவிலிருந்துப் பயனடைவதற்கான குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட வாய்ப்பினை இந்தியா கொண்டுள்ளது.
  • 2050 ஆம் ஆண்டில், கணிக்கப்பட்ட உலக மக்கள்தொகையில் பாதி அளவு வளர்ச்சி என்பது எட்டு நாடுகளில்  மட்டுமே பதிவாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • அவை: காங்கோ ஜனநாயகக் குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஐக்கியக் குடியரசு ஆகியனவாகும்.
  • மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தற்போது, வாழ்நாள் கருவுறுதல் வீதத்தில் எவ்வித அதிகரிப்பும் இல்லாத நாடுகளில் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்