TNPSC Thervupettagam

இந்தியாவின் மருந்து மற்றும் மருத்துவச் சாதனங்கள் துறையில் மாற்றம்

February 4 , 2026 14 hrs 0 min 16 0
  • இந்தியாவின் மருந்துத் தொழில், சிக்கலான பொதுவான மருந்துகள், பயோசிமிலர்கள் மற்றும் புதுமைகளில் தனது கவனத்தைக் கூர்மையாக்கி வருகிறது.
  • குறைந்த விலையில் தடுப்பூசிகளை வழங்குவதில் இந்தியா ஒரு உலகளாவிய தலைவராக உள்ளது.
  • தற்போது, ​​மதிப்பு அடிப்படையில் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் 11வது இடத்தில் உள்ளது என்பதோடு இதன் உலகளாவியப் பங்கு 3 சதவீதமாக உள்ளது.
  • அளவு அடிப்படையில் உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளதுடன், உலகளாவிய பொதுவான மருந்துகளுக்கான தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது என்ற நிலையில் 2025 நிதியாண்டில் இது 191 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
  • இந்த ஏற்றுமதிகளில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற கடுமையான ஒழுங்குமுறைச் சந்தைகளைக் கொண்ட நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
  • பொதுவான மருந்துகளுக்கு அப்பால், உலகின் பெரும்பாலான டிபிடி, பிசிஜி மற்றும் தட்டம்மை தடுப்பூசிகளையும் இந்தியா வழங்கி வருகிறது.
  • இந்தியாவின் மருத்துவச் சாதனங்கள் துறையும் வேகமாக உலக அளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்பதோடு 2025 நிதியாண்டில் 187 நாடுகளுக்கு இது ஏற்றுமதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்