இந்தியாவின் மாபெரும் ஏர்பஸ் விமான விற்பனை ஒப்பந்தம்
February 18 , 2023 881 days 490 0
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா (AI) நிறுவனமானது சமீபத்தில், 470 விமானங்களை வாங்குவதற்கான இரண்டு மாபெரும் கொள்முதலை மேற்கொண்டது.
ஐரோப்பாவின் ஏர்பஸ் குழுமத்தின் 250 விமானங்கள், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் 220 விமானங்கள் ஆகியவற்றினைக் கொள்முதல் செய்வதற்காக இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.
உலகில் முதல் முறையாக ஒரே நேரத்தில் மிக அதிக அளவிலான விமானங்களை கொள்முதல் செய்ய மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும்.
இது 2011 ஆம் ஆண்டில் அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட 460 விமானங்களுக்கான கொள்முதலினை விஞ்சியுள்ளது.
இதற்கு முன்னதாக ஒரு இந்தியப் போக்குவரத்து நிறுவனம் மேற்கொண்ட ஒரு மிகப் பெரிய கொள்முதல் ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டில் இண்டிகோ நிறுவனம் மேற் கொண்ட 300 விமானங்கள் கொள்முதலுக்கான ஒப்பந்தமாகும்.