இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஆற்றலூட்டப்பட்ட மகிழுந்து நிறுத்தம்
June 26 , 2021 1641 days 590 0
டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா பவர் நிறுவனமானது புனேவின் சிக்காலியுள்ள தனது டாடா மோட்டார்ஸ் மகிழுந்து உற்பத்தி ஆலையில் இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஆற்றலூட்டப்பட்ட மகிழுந்து நிறுத்தத்தினை (carport) அமைத்துள்ளது.
6.2 மெகாவாட் பீக் என்ற திறனுடைய இந்த மகிழுந்து நிறுத்தமானது ஆண்டுக்கு 86.4 லட்சம் கிலோவாட்/மணி அளவிற்கு மின்சாரத்தினை உற்பத்தி செய்யும்.
இது ஆண்டுதோறும் 7000 டன் அளவிலான கார்பன் உமிழ்வினைக் குறைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.