TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரம் – காசியாபாத்

December 11 , 2025 14 days 80 0
  • இந்த அறிக்கையை எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) வெளியிட்டுள்ளது.
  • காசியாபாத் நகரில், 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் மிக உயர்ந்த பட்சமாக PM2.5 அளவு பதிவானது.
  • தேசிய தலைநகரப் பிராந்திய (NCR) நகரங்களில் 20 நகரங்கள் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தினை விட மிக மோசமான மாசுபாட்டைக் கொண்டிருந்ததாக இந்த அறிக்கை குறிப்பிட்டது.
  • டெல்லி, நொய்டா, பகதூர்கர், கிரேட்டர் நொய்டா மற்றும் பாகபட் ஆகியவை மிகவும் மாசுபட்ட மற்ற NCR நகரங்கள் ஆகும்.
  • குறைவான பயிர்த் தாளடி எரிப்பு இங்கு இருந்த போதிலும், மாசுபாடு அதிகரிப்பு என்பது மிக முக்கியமாக நகர்ப்புற உமிழ்வு, போக்குவரத்து, தூசி மற்றும் குளிர்கால குளிர்ந்தக் காற்றின் கீழமிழ்தல் காரணமாக ஏற்பட்டது.
  • ஷில்லாங் (மேகாலயா) PM2.5 பதிவுடன் தூய்மையான நகரமாக உருவெடுத்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்