TNPSC Thervupettagam

இந்தியாவின் மிக உயரமான அனைத்து வானிலை மாற்றங்களையும் தாங்கக் கூடிய ஒரு நிரந்தரப் பாலம்

October 22 , 2019 2095 days 655 0
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் தளபதி செவாங் ரிஞ்சன் பாலம் எனப்படும் இந்தியாவின் மிக உயரமான அனைத்து வானிலை மாற்றங்களையும் தாங்கக் கூடிய ஒரு நிரந்தரப் பாலத்தைத் திறந்து வைத்தார்.
  • இது கிழக்கு லடாக்கில் சீனா-இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

  • ஷியோக் ஆற்றின் மீது அமைந்துள்ள 1400 அடி நீளமுள்ள இந்தப் பாலமானது வடக்கில் உள்ள துணைப் பிராந்தியத்தில் 14,650 அடி உயரத்தில் அமைந்துள்ளது. “லடாக்கின் சிங்கமான” தளபதி செவாங் ரிஞ்சனின் நினைவாக இப்பாலத்திற்கு இவரது பெயர் சூட்டப் பட்டுள்ளது.
  • நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த வீரதீர விருதான “மகாவீர் சக்ரா” என்ற விருது இரண்டு முறை வழங்கப்பட்ட ஆறு ஆயுதப் படை வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
  • லேஹ் மற்றும் பார்தாபூர் பகுதியைப் பாதுகாப்பதில் இவருடைய சிறப்பான மற்றும் தைரியமான செயல்களுக்காக இவர் 'லடாக்கின் சிங்கம்' என்று அறியப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்