இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி வழிகாட்டுதல்கள் 2025
June 6 , 2025 4 days 19 0
இந்தியாவானது உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனங்களை நமது உள்நாட்டில் மகிழுந்துகளைத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய முதன்மை மின்சார வாகனக் கொள்கையை உருவாக்கி வருகிறது.
இந்த நிறுவனங்கள் ஆனது, தற்போது உள்ள 70 முதல் 100% வரையிலான இறக்குமதி வரியிலிருந்து 15% என்ற குறைந்த இறக்குமதி வரியில் ஆண்டுதோறும் 8,000 மின்சார நான்கு சக்கர வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
ஆனால் இந்த சலுகையைப் பெற, இந்தியாவில் ஒரு விண்ணப்பதாரர் சுமார் 3 ஆண்டு காலத்தில் 4,150 கோடி ரூபாய் (சுமார் 500 மில்லியன் டாலர்) மதிப்பில் குறைந்தபட்ச முதலீட்டு உறுதிமொழி மேற்கொள்ளப்பட வேண்டும்.