இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பதற்கான SOP
June 25 , 2025 39 days 67 0
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) சரிபார்ப்பதற்கான அதன் முக்கியச் சீர்தரச் செயல்பாட்டு நடைமுறையினைப் (SOP) புதுப்பித்துள்ளது.
இதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த வேட்பாளர்கள் EVM மீதான சரி பார்ப்புகளைக் கோர அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இந்தப் புதுப்பிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட SOP ஆனது, வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதையும் தேர்தலின் நேர்மை தன்மையினை நிலை நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வேட்பாளர்கள் தற்போது தேர்தலில் பயன்படுத்தப்படும் EVM இயந்திரங்களில் சுமார் 5% வரையிலான சரிபார்ப்பைக் கோரலாம்.
இந்தச் செயல்முறையில் ஒரு இயந்திரத்திற்கு 1,400 வாக்குகள் வரையிலான மாதிரி வாக்கெடுப்பு அடங்கும்.
EVM முடிவுகள் VVPAT சீட்டுகளுடன் பொருந்தினால், இயந்திரம் சரிபார்க்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.