TNPSC Thervupettagam

இந்தியாவின் மின் உற்பத்தித் திறனில் மைல்கல்

December 5 , 2025 14 hrs 0 min 22 0
  • இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் ஆனது 2025 ஆம் அண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி 5.05 லட்சம் மெகாவாட் அளவினை எட்டியது.
  • புதைபடிவம் சாரா எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தித் திறன் (2,59,423 மெகாவாட்) ஆனது தற்போது புதைபடிவ சார் எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தித் திறனை (2,45,600 மெகாவாட்) விட அதிகமாக உள்ளது.
  • இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து 2,50,643 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை எட்டியுள்ளதுடன், 2030 ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் (GW) அளவிலான புதை படிவம் எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தித் திறனை அடைவதற்கான அதன் இலக்கினை ஆதரிக்கிறது.
  • சிறிய அணு உலைகளுக்கான பணிகள் மற்றும் புதிய எரிபொருள் மேம்பாட்டுப் பணிகளின் ஆதரவுடன், 2047 ஆம் ஆண்டிற்குள் அணுசக்தி சார் உற்பத்தித் திறனை 100 ஜிகாவாட்டாக விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்