இந்தியாவின் மீது ஐரோப்பிய ஒன்றியம் (EV) – ஐக்கியப் பேரரசு (UK) பிரிக்ஸிட் ஒப்பந்தத்தின் தாக்கம்
December 29 , 2020 1781 days 712 0
சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவற்றிற்கிடையேயான பிரிக்ஸிட் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா மிக அதிக அளவில் பயனடைய இருக்கின்றது.
இந்தியாவிற்கான ஆதாயங்கள் குறிப்பாக சேவைத் துறையில் உள்ளன.
இதற்குக் காரணம் UK நாட்டின் நாணயம் இனி மிக மலிவானதாக விளங்குவதாகும்.
இந்தியாவின் 14வது மிகப்பெரிய வர்த்தகப் பங்காளர் நாடு UK ஆகும்.
தற்பொழுது இந்தியாவானது UK நாட்டுடன் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தக உபரியைக் கொண்டுள்ளது.