சரியானதை உண்பதற்கான இந்தியாவின் முதலாவது ரயில் நிலையம்
December 8 , 2019 2079 days 728 0
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI - Food Safety and Standards Authority of India) மும்பை மத்திய ரயில் நிலையத்திற்கு சரியானதை உண்பதற்கான இந்தியாவின் முதலாவது ரயில் நிலையம் என்று சான்றளித்துள்ளது.
இது நான்கு நட்சத்திர மதிப்பீட்டுடன் அந்த ரயில் நிலையத்தை மதிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது 2018 ஆம் ஆண்டில் FSSAI ஆல் தொடங்கப்பட்ட சரியான உணவை உண்ணும் இந்தியா என்ற முயற்சியின் கீழ் வருகின்றது.
இந்திய ரயில்வே ஆனது, தனது பயணிகளுக்கு ஆரோக்கியமான மற்றும் சரியான உணவைத் தேர்வு செய்ய உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக உணவு உரிமை நிலையத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.