TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது என்ஜினல்லாத இரயில் வண்டி -Train 18

October 26 , 2018 2400 days 953 0
  • இந்தியாவின் முதல் என்ஜினல்லாத இரயில்வண்டியான Train 18, அக்டோபர் 29ம் தேதியன்று பரிசோதனைகளுக்காக சோதிக்கப்பட உள்ளது. இது 30 வருடமாக உள்ள சதாப்தி எக்ஸ்பிரஸ் வண்டிக்கு மாற்றாக கருதப்படுகின்றது.
  • இந்த பளபளப்பான புதிய வண்டி 100 சதவிகிதம் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையில் (Integral Coach Factory - ICF) தயாரிக்கப்பட்டது.
  • முழுவதும் குளிர்வசதி செய்யப்பட்ட இந்த இரயில் வண்டி சதாப்தியின் வேகமான மணிக்கு 130 கிலோ மீட்டர் என்பதைவிட அதிகமாக 15 சதவிகிதம் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் விதத்தில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் வசதியைப் பெற்றிருக்கின்றது.
  • இந்த (Train 18) வண்டியின் பயணப் பெட்டிகள் LED விளக்குகளோடு பொருத்தப்பட்டு ஆற்றல் திறன் வாய்ந்ததாக உள்ளதோடு மட்டுமல்லாமல், மெட்ரோ ரயில் வண்டிகளில் உள்ளதைப் போல இந்த வண்டி தன்னிச்சையாக உந்தப்படும் வசதியுடைய என்ஜினல்லாத இரயில் வண்டி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்