இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த இயந்திரப் பொருள் பூங்கா
March 6 , 2021 1725 days 756 0
இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த இயந்திரப் பொருள் பூங்காவானது தும்கூரு இயந்திரப் பொருள் பூங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது கர்நாடகாவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவானது மாநில அரசு மற்றும் இந்திய அரசின் கனரகத் தொழிற்துறை ஆகியவற்றினால் கூட்டாக இணைந்து இந்திய மூலதன சரக்குத் துறையில் போட்டித் தன்மையின் மேம்பாடு என்ற திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய இயந்திரப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பானது இதற்குத் தொழில்நுட்ப உதவியை அளிக்கின்றது.
இந்தப் பூங்காவானது பெங்களுரூவில் இருந்து ஏறத்தாழ 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வசந்த நரசபுரத்தில் அமைந்துள்ளது.