கோவா மாநில அரசானது இதனை ஏற்படுத்துவதற்காக 49 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன அலகுகளின் கூட்டமைப்பிற்கு நிலத்தை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டமானது கப்பல் வடிவமைப்பு, கப்பல் கட்டமைப்பு, கப்பல் பழுது பார்த்தல் மற்றும் கடல்சார் உபகரணங்களின் தயாரிப்பு ஆகியவற்றிற்காக உலகத் தரம் வாய்ந்த வசதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.