இந்தியாவின் முதலாவது தூயப் பசுமை ஹைட்ரஜன் ஆலையானது அசாமில் உள்ள ஜோர்ஹட் என்னுமிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இது ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தினால் தொடங்கப்பட்டது.
இந்த ஆலையானது, 100 kW எதிர்மின் அயனி மாற்றச் சவ்வு மின்னாற்பகுப்பு என்ற வரிசையை (Anion Exchange Membrane (AEM) Electrolyser array) பயன்படுத்தி, தற்போதுள்ள 500 kW சூரியசக்தி ஆலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இருந்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்கிறது.