இந்தியாவின் முதலாவது நீருக்கடியிலான மெட்ரோ - கொல்கத்தா
January 30 , 2020 1918 days 811 0
இந்தியாவின் முதலாவது நீருக்கடியிலான மெட்ரோவானது ஹூக்ளி நதிக்கரையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
இந்தத் திட்டமானது இந்திய ரயில்வேயிடமிருந்து 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியைப் பெறுவதற்காக காத்திருக்கின்றது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மெட்ரோ திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
ஹூக்ளி மெட்ரோவானது நாட்டில் உள்ள மிகப் பழமையான மெட்ரோக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இது 1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
புதிதாக கட்டமைக்கப்பட்டு வரும் இந்த மெட்ரோ ரயில் பாதையானது அந்நகரத்தின் 20% மக்களுக்குப் பயன்பட இருக்கின்றது. மேலும் இந்த மெட்ரோ ரயிலானது ஒரு நிமிடத்திற்குள் ஹூக்ளி ஆற்றைக் கடக்கும்.