மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையானது இந்தியாவின் முதலாவது நேர மேலாண்மை ஆய்வை (Time Release Study - TRS) நடத்திக் கொண்டிருக்கின்றது.
இது வணிகர்களுக்குப் பயனளிப்பதற்காக எல்லையில் சரக்குப் போக்குவரத்தை வேகப்படுத்துவதற்காக நடத்தப்படவிருக்கின்றது.
இது ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07 வரையிலான காலகட்டத்தில் கடல், வான், நிலம் மற்றும் உள்நாட்டுத் துறைமுகம் உள்ளிட்ட 15 துறைமுகங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படவிருக்கின்றது.
குறிக்கோள் : வர்த்தகப் போக்குவரத்தில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதாகும். மேலும் இது எல்லை நடைமுறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான அதனுடன் தொடர்புடைய கொள்கை மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
TRS என்பது சர்வதேச வர்த்தகப் போக்குவரத்தின் திறனை அளவிடுவதற்காக உலக சுங்க அமைப்பினால் ஆதரிக்கப்பட்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூறாகும்.