இந்தியாவின் முதலாவது பெண் மற்றும் பழமையான இதய நோய் நிபுணர்
September 3 , 2020 1810 days 798 0
சமீபத்தில் இந்தியாவின் முதலாவது பெண் மற்றும் பழமையான இதய நோய் நிபுணரான டாக்டர் S. பத்மாவதி காலமானார்.
இவர் இந்தியாவில் லேடி ஹார்டின்ஜ் மருத்துவக் கல்லூரியில் முதலாவது சிறுநீர் இறங்குகுழல் ஆய்வகத்தையும் இருதய நோய் மருத்துவமனையையும் ஏற்படுத்தி உள்ளார்.
இவர் “இருதயத்தின் ஞானமாதா” (God Mother of Cardiology) என்று சிறப்பாக அறியப் படுகின்றார்.
இவர் பத்மபூஷண் (1967) மற்றும் பத்ம விபூஷண் (1992) விருதுகளைப் பெற்று உள்ளார்.
இவர் ரங்கூனில் உள்ள ரங்கூன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டத்தைப் பெற்ற முதலாவது பெண் மாணவி ஆவார்.
இவர் இதயத் துறையில் இந்தியாவின் முதலாவது மருத்துவ முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இவர் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, லோக் நாயக் மருத்துவமனை மற்றும் G.B. பந்த் மருத்துவமனை ஆகிய 3 முக்கிய மருத்துவமனைகளிலும் ஒரே நேரத்தில் தலைமை நிர்வாகியாக பணியாற்றிய முதலாவது மற்றும் ஒரே நபராவார்.