இந்தியாவின் முதலாவது மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு
May 9 , 2022 1281 days 619 0
தேசியத் தலைநகர மண்டலப் போக்குவரத்து கழகமானது (NCRTC) இந்தியாவின் முதலாவது மித-அதிவேக இரயிலை மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பைப் பெற உள்ளது.
மணிக்கு 180 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்லக்கூடிய மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பின் இரயில் பெட்டிகளானது இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது.
டெல்லி மற்றும் மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே இந்தியாவின் முதல் மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பின் வழித்தடத்தினைச் செயல்படுத்துவதற்கு தேசியத் தலைநகர மண்டலப் போக்குவரத்து கழகமானது பொறுப்பேற்றுள்ளது.