இந்தியாவின் முதலாவது மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மையம்
October 13 , 2020 1769 days 917 0
உலகப் பொருளாதார மன்றம் மற்றும் கைடன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் ஏஎம்எச்யூபி (AMHUB) என்பதனை ஏற்படுத்தவுள்ளன.
ஏம்எம்எச்யூபி - AMHUB என்பது மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மையம் (AMHUB - Advanced Manufacturing hub) என்பதனைக் குறிக்கின்றது. இது நாட்டில் தொடங்கப்பட்டு உள்ள இதே வகையைச் சேர்ந்த முன்முயற்சிகளில் முதலாவதாகும்.
கைடன்ஸ் நிறுவனம் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தலைமை முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமாகும்.
AMHUB ஆனது சூரிய ஒளி ஆற்றல், மின்னணு, மின்சாரப் போக்குவரத்து மற்றும் ஜவுளி ஆகிய துறைகளில் தமிழ்நாடு மாநிலத்திற்கு உதவ இருக்கின்றது.
இது 4வது தொழிற் புரட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள பிராந்திய வாய்ப்புகளை அடையாளம் காணுவதன் மூலம் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையை வலுப்படுத்த உதவ இருக்கின்றது.
செயற்கை நுண்ணறிவு, இணையப் பொருட்கள், மேகக் கணினி போன்றவை 4வது தொழிற்துறைப் புரட்சி வாய்ப்புகளாகும்.