சென்னையின் இந்தியத் தொழிநுட்பக் கல்விக் கழகம் மூலம் காப்பு செய்யப்பட மியூஸ் வியரபல்ஸ் நிறுவனமானது இந்தியாவின் முதல் அணியக்கூடிய வகையிலான பண வழங்கீட்டு சூழல் அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகத்துடன் (NPCI) கூட்டு சேர்ந்துள்ளன.
இந்த அமைப்பானது, பயனர்கள் NFC (அருகமைந்த தகவல் தொடர்பு) மூலம் இயக்கப் பட்ட POS முனையங்களின் மீது தட்டுவதன் மூலம் 'Ring One' என்ற ஸ்மார்ட் மோதிரத்தினைப் பயன்படுத்தி பணம் செலுத்த உதவுகிறது.
பரிவர்த்தனைகளுக்கு தொலைபேசி, அட்டை அல்லது பண சேமிப்புத் தளம் எதுவும் தேவையில்லை என்பதோடுமேலும் இந்த மோதிரம் அணிந்திருக்கும் போது மட்டுமே பணம் செலுத்த முடியும்.
மியூஸ் வாலட் ஆனது எந்த RuPay அட்டையையும் இந்த மோதிரத்திற்குள் உள்ள செக்யூர் எலிமென்ட் (SE) சில்லில் சேமிக்கப்பட்ட குறியீடாக மாற்றுவதற்கு RuPay அட்டை அமைப்பைப் பயன்படுத்துகிறது.
SE சில்லு வன்பொருள் நிலையிலான பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தொலைபேசி அல்லது செயலிகளிலிருந்து அட்டைத் தரவைத் தனிமைப்படுத்துகிறது.
இந்த தளமானது, குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள பயனர்களுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மோதிரம் அகற்றப்பட்டால், தொலைந்து விட்டால் அல்லது திருடப் பட்டால், பரிவர்த்தனைகள் ஆனது பாதுகாப்பிற்காக உடனடியாக முடக்கப்படும்.