61 BOBRNALHSM1 எனப்படும் இந்தியாவின் முதல் அலுமினியத்தாலான ரயில் சரக்குப் பெட்டியினை புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
இது HINDALCO, RDSO மற்றும் Besco வேகன் ஆகியவற்றுடன் இணைந்து உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
இந்த ஒற்றை அலுமினியச் சரக்குப் பெட்டியானது அதன் பயன்பாட்டு நாட்களில் 14,500 டன்களுக்கு மேலான கார்பன் டை ஆக்சைடைச் சேமிப்பதோடு, இது 85% மறுசுழற்சி செய்யக் கூடியதாகவும் 180 டன் கூடுதல் எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும், குறைந்த எடை கொண்டதாகவும் குறைந்தப் பராமரிப்பு கொண்டதாகவும் நீண்ட நாட்கள் பயன்படக்கூடியதாகவும் உள்ளது.