TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் இணையவழி சொத்து வரி மாவட்டம் – தம்தாரி

February 4 , 2026 14 hrs 0 min 30 0
  • சத்தீஸ்கரில் உள்ள தம்தாரி மாவட்டம், 'சமர்த் பஞ்சாயத்து' இணைய தளம் மூலம் சொத்து வரி வசூலித்த இந்தியாவின் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
  • நாகரி வட்டாரத்தில் உள்ள சங்கரா கிராமப் பஞ்சாயத்தில், UPI வசதியுடன் கூடிய இணையவழி கட்டண முறை மூலம் இது தொடங்கப்பட்டது.
  • இனி குடிமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே சொத்து வரிகளைச் செலுத்தலாம் என்பதோடு  இது மனித வேலைகளையும் தாமதங்களையும் குறைக்கிறது.
  • இந்த அமைப்பு தம்தாரி மாவட்டத்தில் உள்ள சுமார் 400 கிராமப் பஞ்சாயத்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த மாநிலம் முழுவதும் இது விரிவுபடுத்தப் படலாம்.
  • சமர்த் இணையதளம் வெளிப்படைத் தன்மை, வருவாய் வசூல் மற்றும் பஞ்சாயத்துகளின் நிதிச் சுதந்திரத்தை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்