இந்தியாவின் முதல் இணைய சங்கேதப் பண (Cryptocurrency) தானியங்கி பணமளிப்பு இயந்திரம் (ATM)
October 19 , 2018 2498 days 957 0
கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள கெம்ப் போர்ட் மாலில் இந்தியாவின் முதல் இணைய சங்கேதப் பணத்திற்கான ATM திறக்கப்பட்டது.
இந்த ATM ஆனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.1000 அளவுக்கு செலுத்தவும் பெறவும் மற்றும் மற்ற இணைய சங்கேதப் பணங்களான பிட்காயின், ஈத்தரம் மற்றும் பலவற்றை பரிமாற்றம் செய்யவும் அனுமதிக்கிறது.
மெய்நிகர் நாணய பரிவர்த்தனை நிறுவனமான யுனோகாயின் ஆனது இந்த வைப்பு மற்றும் பெறுதலை அளிக்கும் ATMஐ நிறுவியுள்ளது.