10,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியாவின் முதல் இறையாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) பூங்காவை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு சர்வம் AI அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்தத் திட்டம் கணினி உள்கட்டமைப்பு, பாதுகாப்பான தரவு அமைப்புகள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் புத்தாக்கத் தொகுப்புகளுடன் கூடிய முழுமையான AI மாவட்டமாக நிறுவப்படும்.
இது தமிழ்நாட்டில் சுமார் 1,000 உயர் திறன் கொண்ட உள்ளார்ந்தத் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
செயற்கை நுண்ணறிவுப் பூங்காவில் பொதுத்துறை AI பயன்பாட்டை ஆதரிப்பதற்காக ஆளுகையில் செயற்கை நுண்ணறிவு நிறுவனமும் இடம் பெறும்.
இறையாண்மை மற்றும் பாதுகாப்பான AI சூழல் அமைப்பை உறுதி செய்வதற்காக தரவு, மாதிரிகள் மற்றும் கணினி ஆகியவை மாநிலத்தின் நம்பிக்கை எல்லைக்குள் இருக்கும்.
இந்தியா AI திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வம் AI, இந்திய மொழிகள், குரல் மற்றும் பகுத்தறிவுக்கான அடிப்படை AI மாதிரிகளை உருவாக்கும்.