இந்தியாவின் முதல் உள்நாட்டு எரிவாயு எதிர்கால ஒப்பந்தம்
July 28 , 2026 55 days 209 0
இந்தியாவானது தனது முதல் உள்நாட்டு தரவுகளின் அடிப்படையிலான இயற்கை எரிவாயு எதிர்கால ஒப்பந்தத்தை தேசியப் பங்குச் சந்தை (NSE) மூலம் தொடங்க உள்ளது.
இந்த ஒப்பந்தமானது இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் (SEBI) அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் இது NATGASIND என்ற குறியீட்டின் கீழ் வர்த்தகம் செய்யப்படும்.
இது இந்திய எரிவாயு பரிவர்த்தனை (IGX) குஜராத் (தாஹேஜ்) மைய விலையுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இது mmBtu (மில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகுகள்) என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த ஒப்பந்தமானது ரொக்க-தீர்வு முறையில் நடைபெறும், இதன் வர்த்தக அலகு 250 mmBtu ஆகும். மேலும் இதன்படி எந்தவிதமான நேரடி எரிவாயு விநியோகமும் நடைபெறாது.
தேசியப் பங்குச் சந்தை தீர்வகமானது தீர்வகப் பணிகள், சமரசத் தீர்வுகள், தினசரி சந்தை மாற்றங்களுக்கேற்ப சரிசெய்தல் மற்றும் மார்ஜின் வசூல் ஆகியவற்றை நிர்வகிக்கும்.