TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் எஃகு சாலை

March 31 , 2022 1231 days 1144 0
  • குஜராத்தின் சூரத் நகரிலுள்ள ஹாஷிரா தொழில்துறைப் பகுதியானது இது போன்ற ஒரு சாலையை உருவாக்கியுள்ளது.
  • இந்தச் சாலையானது எஃகு கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்டது.
  • அந்த வகையில் இது நீடித்த மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான சிறந்த எடுத்துக் காட்டுகளுள் ஒன்றாகும்.
  • ஆர்செலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனமானது, இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபை, மத்தியச் சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய எஃகு கசடாலான சாலையை (steel slag road) உருவாக்கியுள்ளது.
  • இந்தச் சாலையானது முழுக்க முழுக்கச் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட எஃகு கசட்டினைக் கொண்டு கட்டடமைக்கப்பட்டது.
  • எஃகு கசடு என்பது, கழிவுப் பொருளாக கருதப்படுவதால் எஃகு தொழில்துறைக்கான பிரச்சினையின் ஒரு முக்கிய மூலமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்