இந்தியாவின் முதல் கடற்பசு காப்பகம்
September 9 , 2021
1341 days
6368
- தென்கிழக்குக் கடற்கரையில் உள்ள பாக் விரிகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசு காப்பகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்தது.
- இது மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா பகுதிகளில் ஒரு கடற்பசுக்கான கடல் காப்பகத்தை அமைக்கும்.
- டுகோங் அல்லது கடல் பசு என்பது அழிந்து வரும் ஒரு கடல் பாலூட்டியினம் ஆகும்.
- சைரேனியா வரிசையில் வாழும் ஒரே உயிரினம் இதுவாகும்.
- கடற்பசுவானது மன்னார் வளைகுடா மற்றும் தமிழ்நாட்டில் பாக் விரிகுடாவில் காணப் படுகிறது.
- IUCN கடற்பசுவை "பாதிக்கப்படக் கூடிய ஒரு உயிரினத்திலிருந்து அழிந்து வரும் ஒரு உயிரினம்" என்று பட்டியலிட்டுள்ளது.

Post Views:
6368