இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவை
December 26 , 2017 2688 days 965 0
இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட அகலப்பாதை புற நகர் இரயில் மின்தொடர் வண்டி மகாராஷ்டிராவில் மும்பையில் மேற்கத்திய இரயில்வேயின் கீழ் போரிவிலி நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது..
மேற்கத்திய இரயில்வேயால் இயக்கப்படும் இந்த இரயில் போரிவிலி இரயில் நிலையத்திலிருந்து தெற்கு மும்பையின் சர்ச்கேட் வரையில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று கட்ட உந்துவிசை அமைப்புடைய இந்த முதல் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் வண்டியானது சென்னை ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்வண்டி ஓட்டுனர் மற்றும் வண்டி காப்பாளர் ஆகியோரிடையேயான மற்றும் பயணிகளுக்கான தொலைத்தொடர்புக்கு எதிர்வரும் நிலையங்கள் பற்றிய ஒளி-ஒலி அறிவிப்பு குறியீடு காட்டிகளோடு ஜி.பி.எஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அமைப்பும் இந்த தொடர்வண்டியில் பொருத்தப்பட்டுள்ளது.